Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகளிர் தினத்தில் வேதனை தரும் விடயம்; 6,869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தனிமையில்

மகளிர் தினத்தில் வேதனை தரும் விடயம்; 6,869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தனிமையில்

3 months ago
in செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை நேற்று (08) பெரு விமர்சையாக கொண்டாடி பெண்கள் தொடர்பில் பெருமை கொள்ளும் நிலையில் 6869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தவிக்கின்றனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்ட 10535 சிரேஷ்ட குடிமக்கள் தற்போது முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி 6,869 தாய்மார்கள் மற்றும் 3,666 தந்தையர்கள் இவ்வாறு முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகத்தின் இயக்குநர் கே. சதுர மிஹிதும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மொத்தமாக 456 முதியோர் இல்லங்கள் இருந்தாலும், அவற்றில் தேசிய முதியோர் செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இல்லங்கள் 143 மட்டுமே என அவர் கூறினார்.

ஐந்து பேருக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் தேசிய முதியோர் செயலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இயக்குநர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு மையங்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக இல்லாததால், முதியோரின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்தவும், அதன்படி முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் கட்டுப்பாட்டிற்கான புதிய விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

முதியோர் இல்லங்களில் வசிப்பதால் அதிகமாக தாய்மார்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் முதியோர் இல்லங்களில் பெண்களே அதிகமாக உள்ளனர்.

துறையில் உள்ள அனுபவங்களின் அடிப்படையில் இத்தகைய நிலைகளைப் பார்ப்பது மிகவும் உணர்ச்சிகரமான விடயமாக இருக்கிறது. குழந்தைகள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், வேலைப் பளு போன்ற காரணங்களால் பெற்றோர் தனிமையில் தள்ளப்படுகிறார்கள்.

சிலர் பெற்றோரை உதாசீனம் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இந்த நிலைகளின் பின்னணி காரணங்களைப் பார்க்கும் போது ஒரு சிலரை எமக்கு குற்றம் சாட்ட முடியாது.

இது மிகவும் சிக்கலான சமூக நிலைமை. எனவே இதை சட்ட ரீதியாக மட்டும் அல்லாமல் ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு