Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு நேற்று (08) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தலைமை காரியாலயத்தில் இருந்து “அரசியல் பாதையில் அவள்” எனும் தொனிப்பொருளில் பதாதைகளை ஏந்தியவாறு, பெண் உரிமைக் கோசங்களை எழுப்பியவாறும் பிரதான மகளீர் தின நிகழ்வு இடம்பெறும் அரசடி தேவநாயகம் மண்டபத்தை பேரணியாக வந்தடைந்தனர்.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு கோசங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணியானது தேவநாயகம் மண்டபத்தினை சென்றடைந்ததும் அங்கு சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி அமரர் திருமதி செல்வி மனோகரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது தாயார் திருமதி.கமலா சிவநேசதுரை ஆகியோரது பிரதான பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், வாகரை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் ,கட்சி உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இளம் கல்வியியலாளர் கௌரவிப்பு, உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் கௌரவிப்பு நடைபெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது வருடாந்தம் சர்வதேச மகளிர் தினத்தில் முன்னெடுக்கப்படும் மகளிர் பிரகடனம் கட்சியின் மகளிர் அணி செயலாளரினால் வாசிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
“பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடவேண்டும்”; பிரசாந்தன்

"பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடவேண்டும்"; பிரசாந்தன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.