Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமார இன்று (17) மக்களுக்கு ஆற்றிய உரை,

“எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு நீண்டகால டெண்டர் கப்பல்களை உரிய காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. எமது தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒரு கப்பலும் உரிய நேரத்திற்கு வராது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தில் ஒரு குறைபாடு காணப்படுகிறது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் இலக்கு வைத்த எரிபொருள் விநியோகம் எமக்குக் கிடைக்கவில்லை.

தற்போது நாம் இராஜதந்திர மட்டத்தில் சில தலையீடுகளைச் செய்துள்ளோம். இரண்டாவதாக, சில அவசர டெண்டர்களைக் கோரியுள்ளோம். டீசல், கச்சா எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நாம் கோரிய டெண்டர்களுக்கு மிக நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.

டொலர்களில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வர்த்தகத் தேவைக்கான எரிபொருளை அவர்களே இறக்குமதி செய்துகொள்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம்.

மார்ச் மாதத்திற்கான எரிவாயுத் தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்த போதிலும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தைத் தடை செய்துள்ளமையால் நாம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்திருந்தோம். அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் ஒரு எரிவாயு கப்பலை நாம் ஓடர் செய்துள்ளோம், அது நாளை அல்லது மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது.

எரிவாயு, நிலக்கரி மற்றும் எரிபொருளை எமது இராஜதந்திர உறவுகள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

QR குறியீடு முறைமையில் சில சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். சில சிக்கல்கள் எழும் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் ஞாயிற்றுக்கிழமை தினத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் பதிவு செய்துள்ளனர். தேசிய கட்டமைப்பு ரீதியில் சிக்கல்கள் வரக்கூடும் என்பதைத் தெரிந்தே நாம் இதனை முன்னெடுத்தோம்.” என்றார் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்
செய்திகள்

அரச நிறுவனங்களில் மின்சார சபை மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்

June 14, 2026
இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்
செய்திகள்

இலங்கையில் எல் நினோ பாதிப்பு; மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என தகவல்

June 14, 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
செய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

June 14, 2026
என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்
செய்திகள்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

June 14, 2026
Next Post
வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு