Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான ஸ்ரீ லங்கன்​ எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வாக்குமூலம் குறித்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாந்த தயாநந்த கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இன்று நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் பிரமாண பத்திரத்தை கையளித்திருந்தார்கள்.

அவரை கைது செய்ததோ அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட சம்பந்தமாக எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவரிடம் மேற்கொள்ள விசாரணை முறை தொடர்பில் பிரச்சனை இருக்கிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் என்னிடம் இதில் சம்பந்தப்ட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை கூற சொல்லி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட மரண பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, என் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாக அவர் பிராணபத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

நான் யார் என்று தெரியுமா என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இவரை மிரட்டியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிபதியிடம் தெரிவித்தார்

அவரை மிக மோசமாக அச்சுறுத்தி அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றிருக்கிறார்கள்.எதிர்காலத்தில் பல அரசியல்வாதிகளின் பெயர்கள் இதனுடாக வெளிவரும். காரணம் இவருக்கு மரண பயத்தை காட்டி இவரிடம் இரு பெயர்களை சொல்ல வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை மறுதினம் நோன்பு பெருநாள்; கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு