Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் மீது ஈரான் தொடர் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் மீது ஈரான் தொடர் தாக்குதல்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேல் நிலப்பரப்பை நோக்கி ஈரான் ஏவுகணைகளை செலுத்தியதாக இஸ்ரேல் இராணுவம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

முதல் எச்சரிக்கைக்குப் பிறகு எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என அவசர மருத்துவ உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவப் படைகள் விரைவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று (21) ஜெருசலேமில் உள்ள புகழ்பெற்ற மசூதியான அல் – அக்ஸா மசூதி அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் வான்வழியில் மறிக்கப்பட்ட போதும் ஏவுகணையின் பாகங்கள் மசூதிக்கு மிக அருகே விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பகிர்ந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை, “ஈரானின் ஏவுகணை தாக்குதலின் விளைவுகள் இவை. ஜெருசலேமின் மசூதிக்கு அருகே ஈரானின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளன. மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் வாழும் பகுதிகள், புனித தலங்களின் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் நாட்டை அழிக்கும் நோக்கத்தில் நேர்மையற்ற முறையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது” என குற்றம்சாட்டும் வகையில் பதிவிட்டனர்.

ஜெருசலேம் மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா மற்றும் அராத் நகரங்களின் மீது நேற்று (21) ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவசரநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு