Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம்; அரசு கோரிக்கை

தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம்; அரசு கோரிக்கை

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை முறையாக நிர்வகிக்கும் நோக்கில், எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வரும் பின்னணியில், உள்நாட்டு விலைகளையும் அதற்கு இணையாக உயர்த்துவதை விட, எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே மிகவும் நடைமுறைச் சாத்தியமானதாகும் என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் பொதுமக்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பு குறித்தும் அவர் நினைவுபடுத்தினார்.

தற்போதைய நெருக்கடி நிலையைத் தணித்து, இக்காலப்பகுதியை வெற்றிகரமாகக் கடந்து செல்ல மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.

புதிய விலை அதிகரிப்புடன், டீசல் லீட்டருக்கு 100 ரூபாயும், பெட்ரோல் லீட்டருக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக (சுமையாக) ஏந்துவதாகவும், ஒரு மாத காலத்திற்கு அரசாங்கம் இதற்காகச் செலவிடும் மொத்தத் தொகை 20,000 மில்லியன் ரூபாய் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு