Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

6 months ago
in செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா குறிப்பிட்டார்.

எனினும், பேருந்து கட்டண திருத்தம் நேற்று (22) முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என பல பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும் தமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் கட்டண திருத்தம் இடம்பெறாத காரணத்தினால், இன்றைய தினம் பேருந்து சேவைகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் வரை சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன், 10 சதவீதத்திற்கும் அதிகமான கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
Next Post
இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு