தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம்(23.03.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கருத்து தெரிவிக்கும் போது சபையில் குழப்பம் ஏற்பட்டது.








