ஈரான்–அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அவை மாற்று வழியாக ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு போர் சூழல், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு பணிகள், எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.








