Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலையடிவேம்பில் எரிபொருள் பதுக்கியதாக போலி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர் விடுதலை

ஆலையடிவேம்பில் எரிபொருள் பதுக்கியதாக போலி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்க ஊழியர் விடுதலை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் 800 லீற்றர் டீசல் கொள்கலன்களில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்த சம்பவத்தில் குறித்த நபருக்கு எதிராக போலியாக வழக்கு தொடர்ந்துள்ளமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் குற்றமற்றவர் என அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் அவரை விடுதலை செய்து மீட்கப்பட்ட டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை (27) பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தது உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்து 800 லீற்றர் டீசலுடன் அங்கு கடமையாற்றும் ஒருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி ஆஜராகி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த டீசலுக்கு முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் உண்மை விடையங்களை எடுத்துக் கூறினார்.

இதனையடுத்து ஆவணங்களை ஆராய்ந்த நீதவான் பொலிசார் போலியாக வழக்கு தாக்குதல் செய்துள்ளமை கண்டறிந்து, கைது செய்யப்பட்டவர் குற்றமற்றவர் என விடுதலை செய்ததுடன் அங்கு மீட்கப்பட்ட டீசலை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தது உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவிக்கையில்,

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அக்கரைப்பற்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் தங்கள் தேவைக்காக டீசல் தேவையென முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும்.

குறித்த அரச கட்டளைக்கு அமைய 04 பெரல் டீசல் வழங்கப்பட்டு திணைக்களத்தினர் கொண்டு செல்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.

இதன் போது இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வருகை தந்த பொலிஸாரிடம் அதற்கான அரச கட்டளையை காட்டியும் பொலிசார் அதனை ஏற்காது அதனை மீறி அங்கிருந்த 04 டீசல் கொள்கலன்களை கைப்பற்றியதுடன், கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு தாககுதல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது போதிய ஆதாரங்கள் உள்ளதால் சுமத்தப்பட்ட குற்றசாட்டு போலியானது என நிரூபிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த காலங்களிலும் தற்போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பிரதேச மக்களுக்கு முடிந்தவரை எரிபொருள் நெருக்கடி ஏற்படாதவாறு சீரான முறையில் துரிதகதியில் இரவு பகல் பாராது ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் எரிபொருளை விநியோகித்து வந்தனர்.

இதனை பொறுக்க முடியாதவர்களால் பிரதேசத்தை மற்றும் ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவமானப்படுத்தும் திட்டமே செயலாக இதனை கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
Next Post
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக அரசின் தீர்மானம்

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக அரசின் தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.