மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில், நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று (30.03.2026) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்துகொண்டிருந்த போது குருக்கல்மடத்தில் வைத்து தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரிலும், நீதிபதியின் மேற்பார்வையிலும் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.












