Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வௌிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

வௌிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

5 months ago
in செய்திகள்

வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு இன்று (30) அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்கவும் குறித்த நபர்களில் அடங்குகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர் கொலை, பாரிய கொள்ளை, துப்பாக்கி வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணப் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என கூறினார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.

சர்வதேச உறவுகள் காரணமாக, சிவப்பு அறிவித்தல் இன்றியும் சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிகிறது.

அவ்வாறு 13 சந்தேகநபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரு சந்தேகநபர்களும் சிவப்பு அறிவித்தல் இன்றியே கொண்டு வரப்பட்டனர்.

தற்போது வரை 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
Next Post
23 நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபு

23 நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு