ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு அல்லது அட்டவணையை நிர்ணயிக்கத் தாம் விரும்பவில்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஊடகமான ‘நியூஸ்மாக்ஸ்’ (Newsmax) தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் போரானது தற்போது “நிச்சயமாகப் பாதி கட்டத்தைத் தாண்டிவிட்டது” எனத் தெரிவித்துள்ள அவர், ஈரானின் இஸ்லாமியக் குடியரசு இறுதியில் “உள்நாட்டிலேயே வீழ்ச்சியடையும்” எனவும் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை எதிர்வரும் சில வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, இஸ்ரேலியப் பிரதமரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளமை சர்வதேச மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.








