1990ம் ஆண்டு மட்டு கல்முனை வீதியால் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் முதலாவது தடவையாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் கடந்த 3 நாட்களாக களுவாஞ்சிகுடி நிதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் மனித உடலின் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவ்விடத்தில் அகழும் பணி இன்று மாலையோடு கைவிடப்பட்டு அவ் இடம் மூடப்படுகிறது
மூன்றாவது நாளோடு முதலாவதாக தோண்டட்ட இடம் கைவிடப்பட்டு மூடப்படுகிற நிலையில் அகழ்வுப் பணியும் இன்றோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அப் பகுதியில் சந்தேகிக்கப்படும் ஏனைய இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு நீதி மன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.








