Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

5 months ago
in செய்திகள்

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும், முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சிறந்த கலாசாரத்தைக் கொண்டுள்ள எமது சமூகத்தில், இந்தப் புதிய முறைகளை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்ற சவால் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் கூறினார்.

QR என்று சொன்னாலே மக்களின் நினைவுக்கு வருவது எது? எரிபொருளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி. QR ஊடாக உரம் வழங்கப்படவுள்ளதாகக் கூறியபோது, உரத்தையும் குறைக்கப் போகிறார்கள் என்ற ஒரு கருத்து உருவானது.

இவ்வாறு QR என்பது இறுதியாக கட்டுப்படுத்துதல் என்ற ஒன்றிற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. எனவே கொடுக்கல் வாங்கல்களுக்கும் இது கொண்டு வரப்படும் போது, இதுவும் ஒரு கட்டுப்பாடா என்று மக்கள் நினைக்கக்கூடும்.

அதனால் இது குறித்து ஒரு விசேட விழிப்புணர்வுத் திட்டம் அவசியமானது. ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் எமது நாட்டில் QR குறியீடுகள் ஊடாக இடம்பெறும் அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களையும் மிக வேகமாகப் பிரபலப்படுத்த முடியும் என நாம் நம்புகிறோம்.

இது தொடர்பில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பல நிதி நிறுவனங்கள் இப்போது புத்தாண்டுக்கான விளம்பரங்களை உருவாக்கி வருகின்றன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, புத்தாண்டு காலக் கொடுக்கல் வாங்கல்களை QR குறியீடுகள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களாக மாற்ற முடிந்தால், அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும்.

அப்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால் புதிய விடயங்கள் கவர்ச்சிகரமானதாகவோ அல்லது இலகுவானதாகவோ இல்லாவிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
Next Post
அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.