Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த கப்பல் பயணித்தாலும் முற்றுகையிடுவோம்; சர்வதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த கப்பல் பயணித்தாலும் முற்றுகையிடுவோம்; சர்வதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், அணுசக்தி தொடர்பான முக்கியமான விடயத்தில் மட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும், ஆனால் ஈரானின் நடவடிக்கைகள் அதற்கு இடையூறாக உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பில் உள்ள அனைத்து கப்பல்களையும் தடுத்து நிறுத்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் பகுதியில் ஈரான் வைத்துள்ளதாக கூறப்படும் கண்ணிவெடிகளை அமெரிக்க கடற்படை அகற்றத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமான முறையில் கட்டணம் செலுத்தும் எவருக்கும் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் இருக்காது என்று கூறிய அவர், அமெரிக்கா மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானியரும் மிகக் கொடூரமாக அழிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த “முற்றுகை நடவடிக்கை” விரைவில் தொடங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்துங்கள்

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்துங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு