Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்துக்களினால் 29,000 பேருக்கு சிகிச்சை; பட்டாசு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

விபத்துக்களினால் 29,000 பேருக்கு சிகிச்சை; பட்டாசு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சித்திரை புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க இது குறித்துத் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகள் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 29,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துகள் தொடர்பான திடுக்கிடும் புள்ளிவிவரங்களை அவர் இதன்போது வெளியிட்டார்:

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களிலேயே விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.

பொதுவாக மேல் மாகாணத்தில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தாலும், விபத்துகளைப் பொறுத்தமட்டில் மேல் மாகாணத்தை விட ஏனைய மாகாணங்களிலேயே அதிகப்படியான விபத்துகள் பதிவாகுவதாக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளைத் தவிப்பதில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்த்தல், பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளின் போது மிகுந்த அவதானத்துடன் இருத்தல், நீர்நிலைகளில் நீராடும் போது பாதுகாப்புடன் இருத்தல் வேண்டும்;

இந்த மகிழ்ச்சியான பண்டிகைக் காலம் துயரமாக முடிவடையாமல் இருக்க, ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு