Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில்
அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால், கல்யாண வீட்டுக்கு நாள்
குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம்
திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க
போவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்
போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டிக் காணிகளை அளவிடப் போவதாக காணி உரிமையாளர்களை வரவழைத்திருந்தார்கள்.
ஆனால் தையிட்டி விகாரையின் விகாராதிபதியால் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நில அளவைகள் நிறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர்
காணி அளவீட்டுப் பணிகளுக்கான நடவடிக்கைகளை உரிய முறைப்படி செய்தாரா? என்ற சந்தேகம்
எழுகின்றது.

காதலர்கள் தொலைபேசியில் உரையாடுவது போன்று அரச அதிகாரிகள் தொலை பேசியில் உரையாடி
நிர்வாக விடயங்களைக் கையாள முடியாது.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளையைக் காணவில்லை என்பது போல் அமைச்சர் சந்திரசேகர் ஏன்
நேற்றைய நாளில் பிரசன்னமாகவில்லை .? அவர் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் அளவீட்டுப்
பணிகளுக்கான பிறிதொரு நாளுக்கு மாற்றி இருக்க வேண்டும்.

காணி அளவீடு செய்யப் போவதாக அறிவித்தால் மக்கள் அதனைக் குழப்பி அளவீட்டுப் பணிகளை
நிறுத்துவார்கள் என ஆளுந்தரப்பு நம்பியிருந்தது. ஆனால் மக்கள் அவ்வாறு செய்யாது காணிகளை
அளவீடு செய்து காணிகளை விடுவித்தால் போதுமென்ற மனப்பாங்குடனே செயற்பட்டார்கள்.

அதனால் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி எதிர் மாறாகவே செய்யப்பட்டார். அளவீட்டுப்
பணிகள் ஆரம்பமாவதற்கு முதல் நாள் இரவோடு இரவாக பலாலி பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற
விகாராதிபதி அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.

விகாராதிபதி முறைப்பாடு செய்கின்ற போது அந்தக் காணிக்குரிய உறுதி இருக்கின்றதா என்பதைப்
பொலிஸார் ஆராய்ந்த பிற்பாடே அந்த முறைப்பாட்டை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் பொலிஸார்
இனவாதமாகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணி உரிமையாளர்களுடைய காணிகளை அளவீடு செய்து
காணி வரைபடங்களை வரைந்ததன் பிற்பாடு விடுவிக்கப் போவதாக அமைச்சர் சந்திரசேகர்
தெரிவித்திருந்தார்.

அவர் வெளிநாடு சென்று இருந்தால், அவர்களுடைய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அந்த
இடத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே ஆரம்பத்தில் இருந்தே காணிகளை அளவீடு
செய்யப் போகின்றோம் என்பதைச் சூழ்ச்சி முயற்சியாகவே மேற்கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதற்காகவே மக்களிடம் வருகின்றனர். மக்களை
ஏமாற்றுகின்றனர். அவர்களுடன் இணைந்து யாழ் மாவட்ட அரச அதிபர் சிறுபிள்ளைத்தனமாக
நடக்கக்கூடாது. காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்தல்களை வழங்கி
எல்லோருடனும் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தூபி அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்
நாடுகளில் வசிக்கின்றார்கள். அவர்களுடைய காணிகளை காட்டிக் கொடுத்தவர்கள் யார்? கருணா
போன்ற துரோகிகள் இன்றும் எங்களுக்குள் இருக்கிறார்கள்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச
சபையால் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை
தொடர்ச்சியாகப் புறக்கணிப்பது என ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும்
முடிவெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.