Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2027 அக்டோபர் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையை இணைக்கும் வீதி பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

நெடுந்தீவில் 1,400 குடும்பங்கள் வாழ்கின்றன. சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இங்கு நிறைய இடம் உள்ளது. எனவே, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

போக்குவரத்து பிரச்சினைதான் இப்பகுதிக்கு பெரும் பிரச்சினையாகும். இதனால் பாடசாலையைக்கூட உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்கள்கூட 3 மணிக்கு மூடப்படுகின்றது.

நெடுந்தீவு இலங்கை படத்தில் இருந்தாலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு கிடைக்கவில்லை. போக்குவரத்து பிரச்சினையே நெடுந்தீவின் கழுத்தை நெறித்துள்ளது எனலாம்.

நெடுந்தீவுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வேறு குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை தீர்க்கலாம். எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு அரசுகள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தன. ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நெடுந்தீவு, பருத்தித்துறை மற்றும் நைனாதீவு போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாண அரசாங்கம் (உள்ளாட்சி மன்றங்கள்) கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

கப்பல் போக்குவரத்து, இறங்குதுறைமுகம் பிரச்சினைகள் உரியவகையில் தீர்க்கப்படும். நெடுந்தீவுக்கு இரு இ.போ.ச பஸ்கள் கோரப்பட்டிருந்தன. அதனையும் நாம் விரைவில் வழங்குவோம்.

அதேவேளை, எமது அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை. கொள்கை அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எனினும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன.

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.