Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாரிய வலுசக்தி நெருக்கடி ஏற்படும்”;  சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!

“ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாரிய வலுசக்தி நெருக்கடி ஏற்படும்”; சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்குமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 20 ஆம் திகதியாகும்போது நாட்டுக்கு 25 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர ட்ரைடன் செம்பா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த காலம் முடிவடைந்துள்ளது. இதுவரை 15 நிலக்கரி கப்பல்களே நாட்டுக்கு வந்திருக்கின்றன. அதனையும் இறக்குவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனால் 25 நிலக்கரி கப்பல்களையும் கொண்டுவரும் சவாலை வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்து செல்வதால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கம் தற்போது 2009இல் இருந்து இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதனால் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்கும். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!
செய்திகள்

புகையிரத பொது முகாமையாளர் நீக்கம் கோரி தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

September 18, 2026
பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
உலக செய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

September 18, 2026
9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்!
செய்திகள்

9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்!

September 18, 2026
‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!
செய்திகள்

‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!

September 18, 2026
சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
Next Post
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு; ட்ரம்ப்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு; ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு