Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“திறைசேரி பணத்தில் ஹேக்கர்கள் கைவைக்கவில்லை; கொடுக்கல் வாங்கல் மின்னஞ்சல்கள் காதல் கடிதங்கள் போன்றுள்ளது”

“திறைசேரி பணத்தில் ஹேக்கர்கள் கைவைக்கவில்லை; கொடுக்கல் வாங்கல் மின்னஞ்சல்கள் காதல் கடிதங்கள் போன்றுள்ளது”

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய அரச நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் (80 கோடி ரூபாவுக்கும் அதிக) நிதி, பொதுப் திறைசேரியிலிருந்து மாயமானது தொடர்பாக முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மற்றும் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் “Truth with Chamuditha” அலைவரிசையுடனான நேர்காணலில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிதி இழப்பு ஒரு ‘ஹேக்கர்’ (Hacker) தாக்குதலால் ஏற்பட்டது என அரசாங்கத் தரப்பு கூறினாலும், மைத்திரி குணரத்ன அதனை வன்மையாக மறுத்துள்ளார். இது “ஹேக்கர்களின் வேலை அல்ல, திறைசேரிக்கு உள்ளேயே நடந்த ஒரு டீல் (Deal)” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் 9 தெரிவிக்கையில்,

கொடுக்கல் வாங்கல்களின் போது பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் மிகவும் தளர்வான முறையில், “காதல் கடிதங்கள்” (Love Letters) போன்ற சுபாவத்தைக் கொண்டிருந்ததாகவும், “பணம் இல்லையென்றால் அடுத்த வாரம் தாருங்கள்” போன்ற செய்திகள் கூட அதில் இருந்ததாகவும் முன்னாள் ஆளுநர்கள் வெளிப்படுத்தினார்.

பொதுவாக திறைசேரியிலிருந்து ஒரு கொடுப்பனவு செய்யப்படுவதற்கு 16 அதிகாரிகள் அடங்கிய கடுமையான அனுமதி நடைமுறை உள்ளது. வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் 8 பேர், அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் 7 பேர் மற்றும் இறுதியாக திறைசேரி செயலாளரின் அனுமதி என அனைத்துப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களையும் தாண்டியே இந்தப் பணம் வெளியேறியுள்ளது.

தற்போதைய திறைசேரி செயலாளரின் செயற்பாடுகள் இங்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அவருக்கு பிரதேச செயலாளர் அல்லது மேலதிக செயலாளர் போன்ற அரச சேவையின் முன் அனுபவம் இல்லை என்றும், இத்தகைய அனுபவமற்ற ஒருவரை இவ்வளவு முக்கியமான பதவிக்கு நியமித்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்த போதிலும், நான்கு மாதங்களாக அரசாங்கம் இதனை மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதே போன்ற முறையில் இந்தியாவுக்குச் செலுத்தவிருந்த மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ய எடுக்கப்பட்ட முயற்சி, திறைசேரியின் கீழ்நிலை உத்தியோகத்தர் ஒருவரின் விழிப்புணர்வால் தடுக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காணாமல் போன பணம் ஆஸ்திரேலியாவிற்குப் பதில் அமெரிக்க வங்கியொன்றுக்குச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தினால் திறைசேரி இதுவரை மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பரிமாற்றங்கள் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதாக மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.

“இது தொடர்பாக உடனடியாக ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்றும், இந்த நிதி மோசடியானது வெறும் பண இழப்பு மட்டுமல்லாது, நாட்டின் பொது நிர்வாக சேவை மற்றும் நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையே காட்டுவதாக முன்னாள் ஆளுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
Next Post
ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரில் மோசடி; ஏமாற்று தொலைபேசி இலக்கங்கள்

ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரில் மோசடி; ஏமாற்று தொலைபேசி இலக்கங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.