Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

களுவாஞ்சிக்குடியில் நகை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஆபரணங்களுடன் தலைமறைவு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோடியுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் குறித்த முகாமையாளர், நிறுவனத்தின் கணக்காளரை அணுகி, “நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார்.

எனவே அவர்கள் நகைகளை பார்வையிட வருவார்கள்,” என கூறி, பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து நகைகளை எடுத்துத் தனது மேசையில் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து வங்கி வைப்பிலிடப்படாத பணம் குறித்து கேட்கப்பட்டபோது, அங்கிருந்த 17 இலட்சம் ரூபாய் பணத்தை தான் வங்கியில் வைப்பிலிட போவதாக கூறி கணக்காளரிடமிருந்து முகாமையாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர், நகைகளை வாடிக்கையாளரிடம் காட்டிவிட்டு வருவதாக கூறி, நகைகள் மற்றும் பணத்துடன் பிற்பகல் 2.30 மணியளவில் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். மாலை நேரமாகியும் அவர் பணிக்கு திரும்பாததால், அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது செயலிழப்பிலிருந்தது.

அவர் திட்டமிட்டே நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் கணக்காளர் ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு