மஹாவ, பலகொல்லகம பகுதியிலுள்ள தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டுப் பயணமொன்றுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தை நிறுத்தி தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்றபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 52 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹாவ பொலிஸா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








