ஈழத்தில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் பிரமாண்டமான கட்டிட அமைப்புடன் 108 சிவலிங்கங்களும் 3000 ம் திருமந்திரப் பாடல்களுடனான திருமந்திர அரண்மனை இன்று கும்பாவிஷேகம் காண விருக்கின்றது.
நேற்று வியாழக்கிழமை எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்றது.சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரியசைவப்பணியை கிழக்கிலங்கையிலும் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் .செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன். வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று இன்று கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை திறப்பது சிறப்பிற்குரியது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் அமையப்பெற்ற கருங்கற்கோயில் முகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு திருக்குடமுழுக்கும் அதனோடு இணைந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களும் கருங்கற்களில் பொறிக்கப்பெற்ற சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக நிகழவுள்ளது.