சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ மற்றும் ‘ஹெரோயின்’ போதைப்பொருட்களுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக வந்த போதே, சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் இந்த போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் இருந்த கிரீம் பகுதியை அகற்றிவிட்டு, அதற்குள் போதைப்பொருளை நிரப்பி அவர்கள் கொண்டு வந்துள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாயும் மகளும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.








