கிரிபத்கொடயில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் மடிக்கணினி மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் அடங்கிய பையொன்று காணாமல் போனமை தொடர்பில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பையை சாமான்கள் வைக்கும் இடத்தில் ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்ற நிலையில், பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியபோது பை காணாமல் போனதாக பைக்கு சொந்தக்காரரான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் பெண் ஊழியரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்வர் மாத்தறையின் மிரிஸ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த மடிக்கணினி சுமார் 265,000 ரூபா மதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








