ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை நகர்த்தும் “Project Freedom” நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், ஈரான் தொடர்பான போரில் அமெரிக்கா அடைந்த வெற்றிகளும், ஈரானிய பிரதிநிதிகளுடன் இறுதி ஒப்பந்தம் எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்களும் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பும் முற்றுகையும் தொடர்ந்து முழு அளவில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








