Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபோதையில் விபத்து; கோடீஸ்வர வர்த்தகர் கைது!

மதுபோதையில் விபத்து; கோடீஸ்வர வர்த்தகர் கைது!

3 years ago
in செய்திகள்

அதிக மது போதையில் சொகுசு காரில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விபத்திற்கு உள்ளாக்கி தப்பிச் சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் ஆனமடுவ, பேத்துக்குளம் பகுதியில் கார் பெயின்டிங் நிலையத்தை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஆவார்.

40 வயதான கோடீஸ்வர வர்த்தகர் தனது நண்பர்கள் சிலருடன் வெட்டியபஹலகம ஏரியில் அதிகளவு மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 14 வயதுடைய மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய கோடீஸ்வர தொழிலதிபர் காயம் அடைந்தவர்களை பற்றி கவலைப்படாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டின் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்காக ஆனமடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரது வீட்டுக்குச் சென்ற போது, ​​பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் எதிர்ப்பையும் மீறி கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுவாசப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதற்கும் அவர் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியமை, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரான வர்த்தகர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த ஆனமடுவ நீதவான் நிரோஷா பட்டபெந்திகோ சந்தேகநபரான வர்த்தகரை எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
Next Post
திரைக்கு வருகிறது ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’!

திரைக்கு வருகிறது ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.