Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும்; காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன்

புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும்; காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன்

4 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அங்கவீனமான உறவுகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 11வது மாதாந்த சபைக் கூட்டம் இன்று 14/05/2026 வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பட்டியல் உறுப்பினர் எஸ். சுலட்சனாவை தவிர ஏனைய உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மாளிகைக்காடு பிரதேசத்தில் டெங்கு அடையாளம் காணப்பட்ட விடயம் தொடர்பில் உப தவிசாளர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இவ்வார இறுதியில் அவற்றுக்கு தீர்வை வழங்கவும், காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பிலும் இதன்போது தவிசாளர் எஸ். பாஸ்கரன் கவனம் செலுத்தினார்.

10 வது அமர்விற்கான கூட்டறிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கௌரவ தவிசாளரின் பிரேரணைகள் ஆராயப்பட்டு காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் 2026ம் ஆண்டிற்கான விபரத்திரட்டைப் பெறுவதற்காக உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு சபை அனுமதி வழங்கியது. மேலும் உறுப்பினர் மு.ந.மு.றனீஸ் அவர்களின் பிரேரணையாக முன்வைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வீதி விளக்குகளை இயக்கும் கடமையில் கடந்த 01.06.2009ம் திகதி முதல் ஈடுபடும் நபருக்கான கொடுப்பனவு தொகை அதிகரித்து ரூபா 8,000.00 வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை உள்வாங்கப்படாமையினால் இத் தொகையை ரூபா 6,000.00 வழங்குவதற்கும் அடுத்த வருடத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் சபை அனுமதி வழங்கியது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு