Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழை உலுக்கிய கொடூரம்; சுவிஸில் இருந்து வந்த முதியவர் வெட்டிக்கொலை – 30 பவுண் நகை, இலட்சங்கள் கொள்ளை

யாழை உலுக்கிய கொடூரம்; சுவிஸில் இருந்து வந்த முதியவர் வெட்டிக்கொலை – 30 பவுண் நகை, இலட்சங்கள் கொள்ளை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் மாவட்டம் – சங்குவேலி பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய வள்ளிபுர சந்திரசேகர் எனும் முதியவர், சங்குவேலியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் வீட்டின் புகைக்கூட்டின் (chimney) வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், முகத்தை துணிகளால் மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள், முதியவர் அணிந்திருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மேலும், தடயங்களை அழிக்கும் நோக்கில் கையுறைகள் அணிந்து செயல்பட்டதுடன், மோப்ப நாய் வழித்தடத்தை குழப்பும் வகையில் மிளகாய் தூள் தூவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கொள்ளையின்போது எந்த கைத் தொலைபேசியையும் எடுத்துச் செல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த முதியவர் 14ஆம் திகதிக்குப் பிறகு காணாமல் போன நிலையில்,

நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர் குறித்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து வந்த மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த குறித்த முதியவரை பணம் நகைக்காக கொன்ற இச் சம்பவம் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
Next Post
1.2 மில்லியனுக்கு விட்ஸ் காரை தருவோம் என்ற அனுரவின் தேர்தல் வாக்குறுதி; எங்கே என சஜித் பிரேமதாஸ காட்டம்

1.2 மில்லியனுக்கு விட்ஸ் காரை தருவோம் என்ற அனுரவின் தேர்தல் வாக்குறுதி; எங்கே என சஜித் பிரேமதாஸ காட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு