விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவுக்குத் தருவோம் என்று மேடைகளில் முழங்கிய ஆட்சியாளர்கள், இன்று வாகனங்கள் மீது மேலதிகமாக 50 சதவீத வரியைச் சுமத்தி மக்களை வஞ்சித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமவில் மாகம மஹாநாம தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சரமாரியாகக் குற்றஞ்சாட்டினார்.
வரி அதிகரித்தாலும் வாகனங்களின் விலை உயராது என நிதிப் பிரதி அமைச்சர் கூறுவது வேடிக்கையானது என்று சாடிய சஜித், இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதை விடுத்து, மக்களின் கோணத்திலிருந்து பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசு பழக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.








