Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கொழும்பில் தடை!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கொழும்பில் தடை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் தடை கொழும்பில் தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை காவல்துறையினர் நீதிமன்றங்களில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருதானை பிரதேசத்தில் நினைவேந்தலை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்’ என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தால் இன்று பிற்பகல் 3 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் ‘முதுகெலும்பு இருப்பவர்கள் ஆயத்தமாகுங்கள். கொழும்புக்கு வருகைதரும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதிவுகள் சமூகவலைத்தளப் பக்கங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

அதனையடுத்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவும், வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அநாவசியமான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் இன்று மாலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை இரத்துச் செய்வதாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இன்று காலை அறிவித்தது.

இது இவ்வாறிருக்க காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் தியாகி திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
திருமலையில் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

திருமலையில் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு