Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுமந்திரன்-சாணக்கியனை சந்தித்த காரைதீவு தவிசாளர்; ஆராயப்பட்ட விடயங்கள்

சுமந்திரன்-சாணக்கியனை சந்தித்த காரைதீவு தவிசாளர்; ஆராயப்பட்ட விடயங்கள்

4 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சாணக்கியன் ஆகியோரை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நேற்று (20) மேற்கொண்டார்.

இச்சந்திப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் இல்லத்தில் இடம்பெற்றதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைப்புனரமைப்பு நடவடிக்கைகள், தமிழர் உரிமைசார் அரசியல் விடயங்கள், காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், காரைதீவு பகுதியில் கல்வி மேம்பாட்டை வலுப்படுத்துதல், மாணவர்களுக்கான வசதிகளை அதிகரித்தல், இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் தமிழர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேச முன்னேற்றம் தொடர்பில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்காலத்தில் மக்கள் நலனையும் பிரதேச முன்னேற்றத்தையும் மையப்படுத்திய பல்வேறு செயற்பாடுகளை இணைந்து முன்னெடுக்க ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு