Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வர்த்தக நிலையத்திற்குள் தனியாக வாழ்ந்த வயோதிப தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

வர்த்தக நிலையத்திற்குள் தனியாக வாழ்ந்த வயோதிப தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய அவசரத் தகவலுக்கு அமைய, குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இவ்வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பதியினராவர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த தம்பதியினரின் பிள்ளைகள் அனைவரும் கொழும்பில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினர் நீண்டகாலமாகக் குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அண்மைக் காலமாக வியாபாரத்தை நிறுத்திவிட்டு, கடையை மூடிவிட்டு அந்த வர்த்தக நிலைய வளாகத்திற்குள்ளேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து பிள்ளைகள் தங்களது பெற்றோருக்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், நீண்ட நேரமாகத் தொலைபேசி அழைப்புகளுக்குப் பெற்றோர் தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் அளிக்கப்படாமையினால் சந்தேகமடைந்த பிள்ளைகள், உடனடியாக அருகில் வசிக்கும் அயலவர்களுக்குத் தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கோரியுள்ளனர்.

அதன்படியே அயலவர்கள் வர்த்தக நிலையத்திற்குச் சென்று பார்த்த போதே, தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யட்டுக் கிடந்தமை தெரியவந்துள்ளது.

மர்ம நபர்கள் எவரேனும் நள்ளிரவில் திருடும் நோக்கோடோ அல்லது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்துடனோ இந்த வர்த்தக நிலையத்திற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்து, இக்கோரக் கொலையைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இக்கோரச் சம்பவம் தொடர்பில் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சான்றுகளைச் சேகரித்து வரும் ஹட்டன் காவல்துறையினர், கொலையாளிகளை விரைவாகக் கைது செய்வதற்கான மேலதிகப் புலனாய்வு விசாரணைகளை அதிரடியாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
Next Post
அவிசாவளை பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!

அவிசாவளை பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு