Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை – நிந்தவூர் கலாசார மண்டபத்தின் புனர்நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிந்தவூர் பகுதிக்கு இன்று (23) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இப்பகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி, மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பிராந்தியத்தின் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து, நிந்தவூர் பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற விசேட நிகழ்வில், கலாசார மண்டபத்திற்கான புனர்நிர்மாணப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி, பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் மஞ்சுள, திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித், தாஹிர், உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில்,

“தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்த, பரங்கியர் (Burgher) என்ற எந்தவொரு வேறுபாடுகளுமின்றி, ஒரே நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து வாழும் புதிய அரசியல் பண்பாட்டை நாம் உருவாக்கியிருக்கிறோம். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இனவாதத்தை வளர்த்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுத்தன. ஆனால், அந்தப் பின்தங்கிய இனவாத அரசியலை மக்கள் முழுமையாகத் தோற்கடித்து எங்களது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இந்த நாட்டில் இனி இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை.

நமது அரசாங்கம் எந்தவித இன அச்சமுமின்றி, பாதுகாப்பான மற்றும் ஒற்றுமைமிக்க ஆட்சியை முன்னெடுத்து வருகிறது. லஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத தூய்மையான நிர்வாகத்தை உருவாக்க மக்களே எங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். நானும், எனது அமைச்சரவை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களின் பணத்தில் ஒரு சதமேனும் வீண்விரயம் செய்யமாட்டோம் என இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் முன்னிலையில் உறுதியளிக்கிறேன்.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கு எதிராகப் பேச முடியாத நிலை மக்களிடம் காணப்பட்டது. ஆனால், இன்று நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் கூட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்; சிலர் நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிலைமைகள் அரிதானவை. எங்களது அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துகிறது. ஏழைகளுக்கு ஒரு சட்டம், அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்குத் தனிச் சட்டம் என்ற நிலை இனி இருக்காது. சட்டம் அனைவருக்கும் சமமானது. நாட்டை முன்னோக்கிக் கட்டியெழுப்ப இதுவே அவசியமானது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், அங்கிருந்து மற்றுமொரு நிகழ்விற்குப் புறப்படுவதற்கு முன்னர், மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களின் அருகில் சென்று ஜனாதிபதி தனது அன்பைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்
செய்திகள்

ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்

July 27, 2026
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026
நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

July 27, 2026
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்;  ரவிகரன் எம்.பி. ஆதங்கம்
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்; ரவிகரன் எம்.பி. ஆதங்கம்

July 27, 2026
தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை
செய்திகள்

தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை

July 27, 2026
அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
Next Post
அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.