‘டித்வா’ சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து, 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் (GN) ஒருவரும் பெலவத்தை சீனி தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரும் பெலவத்தை சீனி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபரால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த இருவரும் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.








