Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடும் எச்சரிக்கை

அம்பாறையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடும் எச்சரிக்கை

2 months ago
in அரசியல், செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள், லஞ்சம் மற்றும் காணி ஆக்கிரமிப்பு விவகாரங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“காசு உள்ளவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இனி இடமில்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

கடலரிப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அட்டாளச்சேனை முதல் கல்முனை வரையிலான 16 கி.மீ கரையோரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமாக 2010 காலத்தில் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொத்துவில் பகுதியில் பொதுப் பூங்கா மற்றும் களப்பு நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முன்னாள் அரசியல்வாதிகள் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை சொந்தச் செலவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆறுகம்பே சுற்றுலா வலயத்தில் உள்ள பல ஹோட்டல்கள் அரச அனுமதி இல்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் (permit lands) செயல்படுவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மூன்று முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

1.காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற விசேட அதிகாரக் குழு அமைக்கப்படும்
2.சட்டவிரோத மணல்/மண் நிரப்புதலைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படை (STF) ஈடுபடுத்தப்படும்
3.கரையோர பாதுகாப்பும் சுற்றுலா மேலாண்மையும் ஒருங்கிணைக்கும் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்

“கிழக்கின் கரையோரப் பகுதியை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்தால் அழிக்க விடமாட்டோம்” என ஜனாதிபதி இறுதியில் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

July 27, 2026
மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
உலக செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

July 27, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

July 27, 2026
பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு
செய்திகள்

பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

July 27, 2026
ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்
செய்திகள்

ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்

July 27, 2026
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026
Next Post
திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு