Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ. எஸ் அமைப்பிற்கும்-சஹ்ரானுக்கும் தொடர்பில்லை; சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கூறுகிறார்!

ஐ. எஸ் அமைப்பிற்கும்-சஹ்ரானுக்கும் தொடர்பில்லை; சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கூறுகிறார்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயல்பட்ட விதம் சந்தேகத்துக்கு இடமானதாக இருந்தது. ஐ. எஸ். அமைப்பிடமிருந்து சஹ்ரானுக்கு உதவிகள் கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அந்த சமயம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. உயிர்த்த
ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹாசிமை கட்டுப்படுத்திய மற்றுமொரு நபர்காணப்பட்டார்.

அந்த நபர் மிகவும் புத்திசாலி – இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. விடுதலைப் புலிகள் கூட அதனை செய்யவில்லை. சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர். அவருக்கு அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது. அவருக்கு மேல் யாரோ இருந்தார்கள் – மிகவும் திறமையும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஒருவர். அவரிடம் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு பலரை ஒருங்கிணைக்கும் திறன் இருந்தது.

அரச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவுகளுக்கு சஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது. அவர்கள் அவருடன் இணைந்தும் செயல்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு முன்னரும் – தாக்குதலின் போதும் – அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் – என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும், “வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப் புலிகள்
இயக்க உறுப்பினர்களே காரணம் என்றகருத்தை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர். அவர்கள் சில ஆதாரங்களை திட்ட மிட்டு உருவாக்கினார்கள் இது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ. எஸ். அமைப்புக்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் பண்டார முன்னெடுத்தார். எனினும், இந்த விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டன. ஐ. எஸ். அமைப்பிடமிருந்து சஹ்ரானுக்கு உதவிகள்
கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தேசிய புலனாய்வு பிரிவின் தற்போதைய தலைவர் சுரேஷ் சாலேக்கும் சி. ஐ. டியினருக்கும் சுமுகமான உறவு காணப்படவில்லை. சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம் பெற வேண்டும் – என்றும் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021/2022 வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021/2022 வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.