Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (27) செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பியோடினார்.

மனோஜ் அல்லது மனோஹரன் என்றழைக்கப்படும் பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 23 ஆம் திகதி பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு குறித்த சந்தேக நபர் கொண்டுசெல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனக்கு உடல் நலக்கோளாறு என இவர் கூறியதையடுத்து கண்டி தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் இன்று 27ஆம் திகதி காலை 5.45 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார்.

இவர் இதற்கு முன்னர் பதுளை ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவை, புலத்சிங்ஹல, இங்கிரிய மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஊடகங்கள் வாயிலாக வழங்கப்பட்ட பரவலான பிரசாரம் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இந்த சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.

தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், சந்தேக நபர் இன்றைய தினம் பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்த அரசு நடவடிக்கை

பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்த அரசு நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.