மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுர தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களின் ஒழுக்கம் தொடர்பான விவகாரங்களை பரிசீலிக்கும் “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் அமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் நடைபெற்ற தேசிய வெசாக் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மத மறுமலர்ச்சியும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
மேலும், மகா சங்கத்தினரை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்த தேவையான சட்டங்களை விரைவில் கொண்டு வர அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








