Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் பாசன் அமரசேகரா இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

எனினும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவர்களது வீடுகளுக்கு சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதவான், அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா
செய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

July 27, 2026
பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
செய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

July 27, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு
செய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

July 27, 2026
மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது
செய்திகள்

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

July 27, 2026
தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
Next Post
சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு