Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா ஆகும்.

95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 495 ரூபா ஆகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 407 ரூபா ஆகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 478 ரூபா ஆகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபா ஆகும்.

இந்த விலை திருத்தங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வந்துள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

இந்தத் திடீர் விலை அதிகரிப்பு வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.

இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், அவர்கள் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

அதன்படி, 410 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 434 ரூபாய் ஆகும்.

அதேபோல், 470 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 495 ரூபாய் ஆகும்.

மேலும், 392 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 407 ரூபாய் ஆகும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

458 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 478 ரூபாய் ஆகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் 265 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபாய் ஆகும் என லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
இன்று சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்

இன்று சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.