Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்கும் யோசனையை அமெரிக்க நிர்வாகம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் தகவலின்படி, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத மேலதிக வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீத கூடுதல் வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கவும், அதனுடன் தொடர்புடைய சட்டங்களை திறம்பட அமல்படுத்தவும் இலங்கை போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், ஆடை மற்றும் துணி வகை இறக்குமதிகளுக்காக குறைந்த வரி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருட்களை அமெரிக்க சந்தைக்கு அனுமதிக்கும் சிறப்பு நடைமுறை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான விரிவான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த முன்மொழிவுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை 6ஆம் திகதி வரை பெறப்படவுள்ளதுடன், ஜூலை 7ஆம் திகதி பொது விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு