கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயில் மூலம் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய பெண்ணொருவர் இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மட்டு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். அவரது கணவர் மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இப்பெண் அண்மைக்காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய, அந்தப் பெண்ணை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவைப் பெற மட்டு தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.








