Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் பசன் அமரசேன இதற்கான அறிவுறுத்தலை வழங்கினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, அதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையின் போது, வழக்கின் முதலாவது சந்தேகநபரான பெசில் ராஜபக்ஷவுக்கு அறிவித்தல் அனுப்புமாறு CID தரப்பு கோரிக்கை விடுத்தது. எனினும், ஏற்கனவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.

தேவையெனில் சர்வதேச பிடியாணை பெறுவதற்கான சத்தியக்கடதாசியை சமர்ப்பித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வழக்குடன் தொடர்புடைய சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் தலைவர் பாஸ்வர் குணவர்தன 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!

மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு