அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தொழில்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
47இற்கும் மேற்பட்ட தொழில்சங்கங்கங்களை கொண்ட இந்தக் கூட்டமைப்பு நேற்று கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடலை நடத்தியது.
இதில், வரிக்கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் இதுவரை நடைபெறவில்லை. எனவே அடுத்த வாரம் முதல் தொழில்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அரசின் புதிய வரிக்கொள்கையை எதிர்த்து முன்னதாக கடந்த 15ஆம் திகதி நாடு முழுவதும் பணிப்புறக் கணிப்பு போராட்டத்தை இந்தத் தொழில்சங்கங்கள் நடத்தின. ஜனாதிபதியுடன் விரைவில் பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் செயலர் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தத் தொழில் சங்கப் போராட்டம் தற்காலிகமாகக்கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.