Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வழக்கு ஒன்று தொடர்பில் ஆட்சேபனை கிளப்பியமை சம்பந்தமாக செலவுத் தொகையாக தலா 10 ஆயிரம் ரூபா செலுத்தும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் மேற்படி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையையும் இடைநிறுத்தி வைத்து யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.

நீதிபதிகளான இராமக்கமலன், றிஸ்வி ஆகியோரைக் கொண்ட ஆயமே இந்த உத்தரவை விடுத்துள்ளது.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரன், பிரதேச சபைத் தவிசாளர் தெரிவின் போது கட்சிக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் அவருக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த உத்தரவை ஆட்சேபித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய தரப்பினரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு இராசேந்திரன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டிணைக்கப்படாத ஒரு நிறுவனம் என்ற காரணத்தால் அதனை ஒரு சட்டபூர்வமான ஆளாகக் கருதி அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்றும், அப்படித் தொடர்வதாயின் இந்த நிறுவனத்துக்கு எதிராக அதன் தலைவர், பொதுச்செயலாளரின் பெயர் குறிப்பிட்டு வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றது என்பதை பத்திரிகை ஒன்றின் மூலமாக பகிரங்கப்படுத்தி அறிவிக்க சிவில் நடவடிக்கை சட்ட கோவை வலியுறுத்துவதால் அதனையும் மனுதாரரர் செய்யாத காரணத்தால் இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சார்பில் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்டிருந்தது.

அந்த ஆட்சேபனையை நிராகரித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், ஆட்சேபனையைக் கிளப்பியமையால் ஏற்பட்ட செலவுத் தொகையாக மனுதாரருக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்கும்படி எதிர்மனுதாரர்களான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை ஆட்சேபித்து அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்த சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் மேற்படி மாவட்ட நீதிமன்றத்தின் செலவுத் தொகை தொடர்பான கட்டளையையும் அந்த வழக்கு விசாரணையையும் இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.

இந்த மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நேற்றைய வழக்கின் போது சுமந்திரன் தம் சார்பில் தாமே முன்னிலையாகி வாதாடினார். சி.வி.கே.சிவஞானம் சார்பில் சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜாவும், இராசேந்திரன் சார்பில் சட்டத்தரணி சுபாஸ்கரனும் முன்னிலையாகினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
Next Post
அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.