Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை இரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த குறித்த மாணவன், பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் விடுதியில் தங்கியிருந்த அறையை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு ஆய்வு செய்தபோது, ​​இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருட்களை எடைபோட்டுப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தராசு மற்றும் ரூ. 75,000 ரொக்கப் பணத்தையும் அந்த மாணவரிடம் இருந்து ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழகமும் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருந்தது.

பல்கலைக்கழகம் நடத்திய விசாரணை அறிக்கையின்படி, குறித்த மாணவரின், மாணவர் தகுதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், துணைவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித்தின் பரிந்துரையின் பேரில் அது தொடர்பான கடிதம் மாணவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
Next Post
கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு