மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மூன்று நபர்களால் இந்தத் திருட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
காவலர்களைக் கட்டி வைத்து விட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொள்ளையின் பின்னர் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களைக் கட்டிப்போட்டு விட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக வங்கிக்குள் நுழைந்துள்ளது.
பின்னர் அந்த கும்பலானது அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை கைது செய்யும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








