Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றிற்கு அரசாங்கத்தின் அனுசரணைய வழங்கிமை மற்றும் சுமார் 5,000 குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருந்தொகை பணத்தைச் சேகரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி ‘ஜன அரகல சன்தானய’ (மக்கள் போராட்ட முன்னணி) இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ தெரிவிக்கையில்,

கடந்த ஜூன் 14 ஆம் திகதி, உலகிலேயே அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு இலங்கையில் நடத்தப்பட்டதாக அரசாங்கம் பெரிய அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனை இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவே கூறப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களே தலைமை தாங்கியிருந்தார். அவரைத் தவிர, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது.

ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த நிகழ்வு தொடர்பான கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்குமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எவ்வாறு அரசாங்க அனுசரணையைக் கொடுத்தார் என்பதுதான் எங்களின் முதலாவது கேள்வி.

அடுத்த விடயம், இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களின் குடும்பங்களிடமிருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருமளவிலான பணம் இங்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தற்போது மீண்டும் இந்த பிள்ளைகளிடம் லோகோ (முத்திரை) ஒன்றிற்காக என கூறி, சான்றிதழுக்காக 3,450 ரூபாயும், மற்றுமொரு தேவைக்காக தலா 2,350 ரூபாயும் வசூலிக்க முற்படுகின்றனர். கஷ்ட பிரதேசங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்த பெற்றோர்கள், கடந்த சில நாட்களாக கொழும்பில் தங்கியிருப்பதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்துள்ளனர். சில குடும்பங்கள் இதற்காக சுமார் 30,000 ரூபாய் வரை செலவிட்டுள்ளன. ஆனால் இறுதியாக, இவை அனைத்தும் ஒரு இந்திய நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராகவே நாங்கள் நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். இந்த அனைத்து விபரங்களும் அந்த முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு அரசாங்க அனுசரணை வழங்கப்பட்டது என்பதும், இந்த அப்பாவி பெற்றோர்களிடம் இருந்து திரட்டப்பட்ட பெருந்தொகை பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பதும் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஏனைய முறைப்பாடுகளைப் போலவே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதிலும் உடனடியாகத் தலையிட்டு, பொறுப்பானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.